விக்டோரியாவினால் கடுமையாக்கப்படும் முடக்க நடவடிக்கை..!!

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த விக்டோரியா மாநிலத்தால் இன்னும் கடுமையாக்கப்படும் சமூக இடைவெளியை பின்பற்றும் நடவடிக்கைகளுக்கு அவுஸ்ரேலியா அரசாங்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை ஆதரவை வெளிப்படுத்தியது.

இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட விக்டோரியா மாநில அரசாங்கம் எதிர்வரும் புதன்கிழமை முதல் குறைந்தது ஆறு வாரங்களுக்கு மெல்போர்னில் வணிக மற்றும் சாதாரண நடவடிக்கைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்டோரியாவின் தொழிற்கட்சி, லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணியால் ஆளப்படும் மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தெரிவிக்கும் ஆதரவு தேசிய ஒற்றுமையைக் காட்டுகிறது என அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மெல்பேர்னில் இன்று ஞாயிற்றுக்கிழமை 650 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது மேலும் கட்டுப்பாடுகள் குறித்த எச்சரிக்கையைத் தூண்டியுள்ளது.

மேலும் விக்டோரியாவின் நடவடிக்கைகளை அதிகரிப்பதில் மத்திய அரசு முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் தங்களினால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதில் அவுஸ்ரேலியா பல நாடுகளை விட மிகச் சிறப்பாக செயற்பட்டுள்ளபோதும் இதற்கு அதிக பொருளாதார செலவு ஏற்பட்டுள்ளது.

இதுவரை அவுஸ்ரேலியாவில் 17 ஆயிரத்து 300 கொரோனா வைரஸ் நோயாளிகள் மற்றும் 200 இறப்புகளை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts