கன்சர்வேடிவ் உறுப்பினர் கைது..!!

பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்னாள் நாடாளுமன்ற ஊழியரால் வழங்கப்பட்டுள்ளது என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் 2019 ஜூலை முதல் 2020 ஜனவரி வரை நடந்ததாகக் கூறப்படும் நான்கு தனித்தனி சம்பவங்களுடன் தொடர்புடையவை என பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜூலை 31, பாலியல் குற்றங்கள் மற்றும் தாக்குதல் தொடர்பான நான்கு தனித்தனியான சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளைப் பெற்றதாகவும் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பெருநகர பொலிஸ் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து 50 வயதான குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஓகஸ்ட் முதலாம் திகதி கைது செய்யப்பட்டார் என்றும் பின்னர் அவருக்கு பிணை வழங்கப்பட்டதாகவும் சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்து பரிசீலனை செய்துவருகின்றோம். இந்த விடயம் இப்போது பொலிஸாரின் கைகளில் இருப்பதால், மேலும் கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது என கன்சர்வேடிவ் கட்சியின் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்

Related posts