இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்று..!!

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 815ஆகவே காணப்படுகிறது.

அவர்களில் 2 ஆயிரத்து 391 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

மேலும் தொற்றுக்கு உள்ளான 365 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம் இந்ததொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் எனும் சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் 48 பேர் சிகிச்சைப் பெற்று வருவதுடன், இந்த தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts