முடக்கநிலை மேலும் தளர்த்துவது இரண்டு வாரங்களுக்கு தாமதிப்பு..!!

இங்கிலாந்தில் இன்று (சனிக்கிழமை)  முதல் திட்டமிடப்பட்ட முடக்கநிலை நடவடிக்கைகளை மேலும் தளர்த்துவது குறைந்தது இரண்டு வாரங்களுக்கு தாமதமாகியுள்ளது.

இன்று மீண்டும் திறக்கத் திட்டமிட்டிருந்த, மக்கள் அதிகம் கூடக் கூடிய வாய்ப்புள்ள சூதாட்ட விடுதிகள், ஸ்கேட்டிங் போன்ற விடயங்களுக்கான தடைகள் நீடிக்கப்பட்டுள்ளன.

அழகு நிலையங்கள் மீண்டும் நெருக்கமான சிகிச்சையைத் தொடங்குவதைத் குறைந்தது பதினைந்து நாட்கள் தடுக்கவும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், இந்த வார இறுதியில் இருந்து 30 விருந்தினர்கள் வரை திருமண வரவேற்புகளை அனுமதிக்கும் நடவடிக்கையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts