பயிற்சிகளை ஆரம்பித்த சென்னை சுப்பர் கிங்ஸ்..!!

ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாவதற்கு ஒரு மாதத்திற்க முன்னரே ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்று பயிற்சிகளை மேற்கொள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், தொடரில் பங்கேற்க உள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களையும் எதிர்வரும் 9 ஆம் திகதி சென்னைக்கு வருகைதருமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 10 ஆம் திகதி டுபாய்க்கு பயணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், இந்திய அரசாங்கத்தின் ஒப்புதலின் அடிப்படையில் திகதிகள் இறுதிசெய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வணிக விமான சேவைகள் இடம்பெறாதமையினால், தங்களது வீரர்களை டுபாய்க்கு அழைத்துச் செல்ல சென்னை சுப்பர் கிங்ஸ் விசேட விமானத்தை ஏற்பாடு செய்ய எதிர்பார்ப்பதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts