தொடரின் வெற்றியாளர் யார்..?

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

இப்போட்டி சவுத்தாம்ப்டன்- ரோஸ் பவுல் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதில் இங்கிலாந்து அணிக்கு ஓய்ன் மோர்கனும், அயர்லாந்து அணிக்கு ஹென்ரிவ் பால்பிரையனும் தலைமை தாங்கவுள்ளனர்.

ஏற்கனவே இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், இங்கிலாந்து அணி ஆறு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதனால் இந்த தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக இப்போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி யாருக்கு கிட்டுகின்றது என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related posts