தனுஷ் பாடலுக்கு நடனம் ஆடிய சிஎஸ்கே வீரர்கள்..!!

இந்தியாவில் மார்ச் – ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் தடைபட்ட போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டது.

செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் தயாராகி வருகிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் எப்போதும் சமூக வலைத்தளத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்கள்.

அந்த வகையில் தற்போது கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜகமே தந்திரம்’, படத்தில் இடம் பெறும் ‘ரகிட ரகிட’ பாடலை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

‘ரகிட ரகிட’ பாடலை தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டார்கள். இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலானது.

Related posts