சீனாவின் டிக்டாக் உள்ளிட்ட பிற செயலிகளை தடை ..!!

சீனாவின் டிக்டாக் உள்ளிட்ட பிற செயலிகளை தடை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ, அமெரிக்க செனட்டர்கள், மற்றும் குடியரசு கட்சி நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள், டிக் டாக் செயலியை தங்கள் நாட்டில் தடை செய்ய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்
இந்தநிலையில் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜனாதிபதி ட்ரம்ப் கூறுகையில், ‘அமெரிக்காவில் டிக்டாக்கை பொறுத்தவரை டிக் டாக் மற்றும் சீனாவுடன் தொடர்புடைய பிற செயலிகள் மீதான தடையை பரிசீலித்து வருகிறோம். டிக்டாக்கிற்கு பதிலாக பரந்த அளவில் மாற்றுவழியை யோசித்து கொண்டிருக்கிறோம்’ என கூறினார்.

சீன செயலியான டிக் டாக்கை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்திற்கு கடந்த ஜூலையில் அமெரிக்கா செனட் குழு ஒப்புதல் அளித்த குறிப்பிடத்தக்கது.

Related posts