உலகை வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்..!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி,

ஹஜ் பெருநாள் என்பது மனிதகுலத்தையும் தியாகத்தின் தெய்வீக குணத்தையும் வண்ணமயமாக்குவதற்கான ஒரு சிறந்த சந்தர்ப்பம். தியாகம் மற்றும் ஒற்றுமையை முதன்மையாக கொண்டு இன்றைய தினம் ஹஜ் பெருநாளை கொண்டாடும் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் உங்கள் எல்லா நற்செயல்களையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.

உலகெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைந்து ஒரே வழிபாட்டு தளத்தில் ஒன்றுகூடி மனிதகுலத்தின் அபிலாஷையான ஒற்றுமை மேலோங்க செய்கின்ற ஹஜ் பெருநாள் சமூக சமத்துவத்தின் மகிமையை உலக மக்களுக்கு வெளிப்படுத்தும் முக்கிய மத நிகழ்வாகும்.

கொவிட் -19 தொற்று பரவிவரும் இந்த நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில் நற்செயல்களில் ஈடுபட்டு இன்று ஹஜ் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோன்று, உங்கள் அனைத்து நற்செயல்களையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

சமாதானம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை மதிக்கும் ஹஜ் யாத்திரையின் மூலம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பல பாடங்கள் உள்ளன. உலகின் முக்கிய மதங்களில் ஒன்றான இஸ்லாத்தின் போதனைகள் பிளவுபட்ட சமூகங்களை ஒன்றிணைப்பதிலும், நியாயமான சமுதாயத்தை உருவாக்குவதிலும் நீண்ட தூரம் செல்லும் என்று நான் நம்புகிறேன்.

இந்த புனித நாளில் இஸ்லாமிய வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுவதன் மூலம் நமது தாய்நாட்டையும் உலக மக்களையும் இந்த தொற்றிலிருந்து பாதுகாக்கும்படி நாம் அனைவரும் சர்வ வல்லமை கொண்ட அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

ஒவ்வொரு ஆண்டும் நல்லிணக்கத்தின் விழுமிய பாடத்தை நினைவுகூரும் மற்றும் ஹஜ் பெருநாள் நோக்கத்தை நனவாக்கும் ஈத்-உல்-பித்ர் என்ற மகிழ்ச்சியான ஈத்- உல்-பித்ர் கொண்டாட்டத்தை கொண்டாடும் இஸ்லாமிய சகோதரத்துவத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related posts