கொரோனாவுக்கு மத்தியில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி ஆரம்பம்..!!

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயோர்க்கில் இன்று ஆரம்பமாகிறது. ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்துபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகி வரும் 13ஆம் திகதி வரை நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் பரவலால் விம்பிள்டன் உட்பட பல தொடர்கள் இரத்தான நிலையில் நடக்கும் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டி இதுவாகும்.…

மேலும்

லெபனானில் அரைவாசி மக்கள் உணவுப் பஞ்சத்தைச் சந்திக்கும் அபாயம்..!!

2020ஆம் ஆண்டின் இறுதியில் லெபனானில் அரைவாசி மக்கள் உணவுப் பஞ்சத்தைச் சந்திக்கும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மேற்கு ஆசிய பொருளாதார மற்றும் சமூக ஆணையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘லெபனானில் உணவுப் பாதுகாப்பு’ என்னும் தலைப்பில் ஆணையகம் வெளியிடுள்ள அறிக்கையில், “லெபனானின் முக்கிய துறைமுகமான பெய்ரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பினால் உணவு தானிய இறக்குமதி…

மேலும்

வவுனியாவில் முச்சக்கரவண்டி தீக்கிரை

வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரிக்குளம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியின் வீடொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சகரவண்டியை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இனந்தெரியாத நபர்கள் இவ்வாறு தீயிட்டு எரித்துவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக முச்சக்கரவண்டியின் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார்…

மேலும்

முல்லைத்தீவில் உயிர்களைக் காவுகொள்ளும் வீதியோர மரங்கள்..!!

முல்லைத்தீவு – நெடுங்கேணி பிரதான வீதியிலுள்ள பழமைவாய்ந்த மரங்கள் வீதியின் நடுவே சரிந்து உள்ளமையினால் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பழமைவாய்ந்த மரங்கள் வீதியோரமாக முறிந்து விழுந்துள்ளன. நேற்று முன்தினம் முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வீதியோரத்தில் இருந்த மரம் முறிந்து வீழ்ந்தமையால் இருவர் பரிதாபகரமாக…

மேலும்

ஈஸ்டர் தாக்குதல் – அகில விராஜ் காரியவசத்திடம் சுமார் 2 மணித்தியாலங்கள் விசாரணை..!!

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சாட்சியம் வழங்க முன்னிலையாகியிருந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் சாட்சியம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். சுமார் இரண்டு மணித்தியாலங்கள் சாட்சியங்கள் வழங்கிய பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேநேரம், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை…

மேலும்

போர்ட்லான்ட்டில் தீவிரமடையும் போராட்டம்..!!

அமெரிக்காவின் ஓரிகன் மாநிலம் போர்ட்லான்டில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் வெடித்த வன்முறை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஜோ பிடனும் கருத்து மோதலில் ஈடுபட்டனர். கடந்த மே 25ஆம் திகதி மினியாபோலிஸ் நகரில் ஆபிரிக்க-அமெரிக்கரரான ஜோர்ஜ் ஃபிளொய்ட் பொலிஸாரால் கொல்லப்பட்டதிலிருந்து அமெரிக்காவில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இனவெறிக்கு எதிரான போராட்டங்களிள்…

மேலும்

சீனாவின் கடல் வலிமையை எதிர்கொள்ள நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியாவில் நிர்மாணிக்க நடவடிக்கை..!

சீனாவின் கடல் வலிமையை இந்திய கடற்படை எதிர்கொள்ளும் வகையில்  அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டமைக்கும் திட்டத்திற்கான ஏலப்பணிகளை மத்திய அரசு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கவுள்ளது. சுமார் 55 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் முன்னணி வெளிநாட்டு நிறுவனங்களுடன் இந்திய நிறுவனங்களும் இணைந்து குறித்த திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. பி-75 என பெயரிடப்பட்டுள்ள இந்த…

மேலும்

இலங்கையில் நேற்று மாத்திரம் 17 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி…!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு…

மேலும்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மீளப் பெறப்பட்டது..!!

2020 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிக்காலத்தில் வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு மீளப் பெறப்பட்டுள்ளது. இதற்கமைய 81 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு  குறித்து விரைவில் அரச உயர்மட்டம்…

மேலும்

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகும் ரணில்..!!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (திங்கட்கிழமை) முன்னிலையாகவுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் குறித்த ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு கடந்த 21ஆம் திகதி முன்னாள்…

மேலும்