ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாட்டை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும்..!!

ஜேர்மனியிலிருந்து 11,000 அமெரிக்கப் படையினரை மீளப் பெறுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாட்டை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘ஆண்டொன்றுக்கு எரிசக்தி தொடர்பாக ரஷ்யாவுக்கு பில்லியன் டொலர்கள் கணக்கில் அள்ளிக்கொடுக்கிறது ஜேர்மனி. ஆனால் நாம் ஜேர்மனியை ரஷ்யாவிடமிருந்து காக்க வேண்டும் இல்லையா! இதெல்லாம் என்ன? நேட்டோவுக்கு 2% கட்டணம் செலுத்துவதில்கூட ஜேர்மனி ஒரு குற்றவாளியாக நடந்துகொள்கிறது. எனவேதான் ஜேர்மனியிலிருந்து படைகளை மீளப் பெறுகிறோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து ஜேர்மனியில் அமெரிக்க படையினரின் எண்ணிக்கை 35,000த்திலிருந்து 24,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஆதிக்கம் தெற்காசியப் பகுதியில் தென் சீனக் கடல் பகுதியில் அதிகரித்துள்ளதால், பழைய பனிப்போர் காலக்கட்டத்தில் ஐரோப்பிய நாடுகளை ரஷ்ய சோஷலிசத்திலிருந்து காக்க அமெரிக்கா தன் படைகளை அனுப்பியது. தற்போது சீனாவை எதிர்கொள்ள இந்தப் படைகளை பயன்படுத்த ஜேர்மனியிலிருந்து மீளப் பெறுவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏற்கெனவே கருத்து தெரிவித்த மைக் பொம்பியோ ‘நம் ஐரோப்பிய நண்பர்கள்’ என்றுதான் விளித்தார். ஆனால் ட்ரம்ப்போ தற்போது ஜேர்மனியைக் குற்றவாளி என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts