நடிகர் தூக்கிட்டுத் தற்கொலை..!!

மராத்தி நடிகர் அசுதோஷ் பாக்ரே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 32.

பகார், இச்சார் தர்லா பக்கா போன்ற மராத்தி படங்களில் நடித்தவர் பாக்ரே. பிரபல மராத்தி நடிகை மயூரி தேஷ்முக்கைத் திருமணம் செய்துகொண்டார். மஹாராஷ்டிராவில் உள்ள நந்தத் பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று பாக்ரே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய பெற்றோர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் பாக்ரேவின் உடலைப் பிரதேசப் பரிசோதனைக்கு அனுப்பினார்கள். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

அசுதோஷ் பாக்ரே, தன்னுடைய சமூகவலைத்தளத்தில் ஒரு மனிதன் ஏன் தற்கொலை செய்துகொள்கிறான் என ஒரு விடியோவைச் சமீபத்தில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அசுதோஷின் தற்கொலைச் சம்பவம் மராத்தித் திரையுலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Related posts