கொவிட்-19: உலகளவில் அதிக உயிரிழப்பை சந்தித்த மூன்றாவது நாடாக மாறியது மெக்ஸிகோ..!!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் அதிக உயிரிழப்பை சந்தித்த மூன்றாவது நாடாக மெக்ஸிகோ மாறியுள்ளது.

வடஅமெரிக்க நாடான மெக்ஸிகோவில் இதுவரை கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், 46 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிக பாதிப்பை கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் மெக்ஸிகோவில், இதுவரை நான்கு இலட்சத்து 16ஆயிரத்து 179பேர் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழு ஆயிரத்து 730பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 639பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர 97ஆயிரத்து 992பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 922பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

அத்துடன், இரண்டு இலட்சத்து 72ஆயிரத்து 187பேர் இதுவரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. இரண்டாவது இடத்தில் பிரேஸில் உள்ளது.

Related posts