ஐக்கிய தேசிய கட்சியினால் மாத்திரமே நாட்டை காப்பற்ற முடியும்..!!

கட்சியில் இருந்து பிரிந்து சென்ற யாரும் உண்மையான ஐக்கிய தேசிய கட்சியினராக இருக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற மக்கள சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் மாத்திரமே மூன்று வேளைகள் உண்ண முடியும் எனவும் அதற்காகவே ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியினால் மாத்திரமே நாட்டை காப்பற்ற முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Related posts