அனைத்து சமூகங்களையும் இனங்களையும் பாதுகாக்க முடியும் பிரதமர்..!!

நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களையும் இனங்களையும் பாதுகாக்கும் ஒரே அரசியல் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யட்டிநுவர பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பொதுஜன பெரமுனாவினால் பெரிய கட்சியாக உருவெடுக்க முடிந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.

கடந்த சில வாரங்களாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கொடுப்பனவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், தேர்தலுக்குப் பின்னர் அவற்றைச் செயற்படுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கடன்களை வழங்குவதற்கும், வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களுக்கும், சுயதொழில் செய்வோருக்கும் தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்குவதற்கான ஒரு திட்டத்தை அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

அத்தோடு தோட்ட உரிமையாளர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தேவையான நிபுணர்களின் உதவியும் வழங்கப்படும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts