115 பேருக்கான உறுப்புரிமையினை நீக்க கடிதம்..!!

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து உறுப்புரிமை நீக்கப்பட்ட 115 பேருக்கான உறுப்புரிமை நீக்க கடிதம் இன்று அனுப்பிவைக்கப்பட உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற 54 வேட்பாளர்களையும், அதற்கு ஆதரவளிக்கும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் 61 பேரையும் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நேற்று அனுமதியளித்துள்ளது.

செயற்குழு கூட்டம் நிறைவடைந்தன் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, ஐக்கிய மக்கள் சக்தியில் தேர்தலில் போட்டியிடுகின்ற 102 பேரில், 54 பேரின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு இன்றைய செயற்குழுவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்துடன், 61 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அவர்களின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதித்துவம் எதிர்காலத்தில் இரத்தாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் தீர்மானம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் எமது செய்திச் சேவை வினவியது.

இதன்போது பதிலளித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கையையே எப்போதும் முன்னெடுக்கின்றாhரே தவிர, புதிதாக எவரையும் இணைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts