வாக்குறுதிகளை நம்புவதற்கு முன்பு கடந்த காலத்தை பற்றி சிந்தியுங்கள் பிரதமர்..!!

தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் அளித்த வாக்குறுதிகளை நம்புவதற்கு முன்னர் கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

மினுவாங்கொட பகுதியில் இடம்பெற்ற பிரசார நடவடிக்கையில் கருத்து தெரிவித்த அவர், தேர்தல்களின் போது பல ஆண்டுகளாக வாக்குறுதிகளை மட்டுமே வேட்பாளர்கள் அறிவித்துள்ளனர் என கூறினார்.

இதற்கிடையில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு என்றும் தேர்தலுக்கு பின்னர் அமையும் புதிய அரசாங்கம் தேசிய பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

நாட்டின் மற்றும் அதன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கடந்த அரசாங்கம் தவறிவிட்டதாக குற்றம் சாட்டிய அவர், 2019 ஈஸ்டர் தாக்குதல் அவர்கள் தோல்விக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் சுட்டிக்காட்டினார்.

Related posts