மருத்துவ ஆராய்ச்சியில் ஒருங்கிணைந்து செயற்பட இந்தியா, பிரித்தானியா..!!

மருத்துவ ஆராய்ச்சியில் ஒருங்கிணைந்து செயற்படும் நோக்கில் 77.10 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்தியாவும்,  பிரித்தானியாவும் கையெழுத்திட்டுள்ளன.

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுப்பட்டு வரும் நிலையில் மேற்படி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இது தொடர்பில் பிரித்தானியாவின் தெற்காசிய மற்றும் கொமன்வெல்த் இணையமைச்சர் தெரிவிக்கையில், “ மருத்துவ ஆராய்ச்சியில் ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்காக இந்தியாவும் பிரித்தானியாவும் கையெழுத்திட்டுள்ளன.

ஒப்பந்தத்தின்படி 5 திட்டங்களை இரு நாடுகளும் செயற்படுத்த உள்ளன. இந்த திட்டங்கள் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

உலக நாடுகள் சந்தித்து வரும் இதர சுகாதாரம் தொடா்பான பிரச்சினைகளுக்குத் தீா்வு காண்பதற்காக இந்தியாவும் பிரித்தானியாவும், ஒருங்கிணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது தொடர்பில்  இந்தியாவுக்கான பிரித்தானிய  தூதா் பிலிப் பாா்டன் கூறுகையில் பிரித்தானியாவுடன் அதிக அளவிலான ஆராய்ச்சிகளில் ஒருங்கிணைந்து செயல்படுவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.

Related posts