மன அழுத்தம் அதிகமாக உள்ளதா..??


இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் வரத்தில் ஒன்று தேங்காய் எண்ணை. தலை முதல் கால் வரை இந்த எண்ணெய் மனிதனுக்கு பல ஆரோக்கியத்தையும், அற்புதத்தையும் கொடுக்கிறது.

இந்த தேங்காய் மரத்தில் ஒவ்வொரு பாகமும் மனிதனுக்கு நன்மையை கொடுக்கிறது. அப்படிப்பட்ட இந்த மரத்திலிருந்து கிடைக்கும் தேங்காய் எண்ணெய் தினமும் பயன்படுத்தினால் மனிதனுக்கு ஏற்படும் மனஅழுத்தைத்தை குறைக்கும் என்று மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் எண்ணெய்யின் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்? அது எப்படி மனஅழுத்தத்தை குறைக்கிறது என்பதை பற்றியும் பார்க்கலாம் –

இதயம்

  • இதய ஆரோக்கியத்திற்கு பேருதவியாக இருப்பது தேங்காய் எண்ணைதான். இதை சமையலுக்கு பயன்படுத்தினால், இதில், உள்ள லாரிக் அமிலம் இதய ரத்த குழாய்கள் மற்றும் உடலில் எல்.டி.எல் எனப்படும் கொழுப்பை அதிகம் சேராமல் தடுத்து உடல் நலனை பாதுகாக்கின்றது.

சருமம்

  • தேங்காய் எண்ணையில் சருமத்தை மிருதுவாக்கும் மற்றும் சுருக்கங்களை போக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் ஆதிக்கம் நிறைந்திருக்கின்றது. மேலும் கோடைகாலங்களில் தேங்காய் எண்ணையை மேற்புற தோலில் பூசி கொள்வதால் சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தோலை பாதுகாக்கலாம்.

புண்கள், காயங்கள்

  • காயம் ஏற்பட்டு ஆறிக்கொண்டிருக்கும் புண்கள், புதிதாக ஏற்பட்ட ரத்த காயங்களில் அடிக்கடி நீர் படுவதை தவிர்க்கலாம். இதற்கு நிவாரணமாக அக்காயங்களில் தேங்காய் எண்ணெயை நன்கு தடவுவதன் மூலம் நீர் புகாமல் பாதுகாப்பு ஏற்படுவதோடு. அப்புண்கள் மற்றும் காயங்களை வேகமாக ஆற்றவும் உதவி செய்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

  • நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருந்தால் தான் எதிர்வரப்போகும் பல வகையான நோய்களில் இருந்து உடலை காக்க முடியும். தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பலமடைந்து, எதிர்காலத்தில் நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

டென்ஷன், மன அழுத்தம்

  • மன அழுத்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவருக்கு சிறந்த தீர்வாக தேங்காய் எண்ணை இருக்கிறது. அதற்கு கொஞ்சம் தேங்காய் எண்ணையை எடுத்து தலையில் தடவி, ஒரு 20 நிமிடங்கள் இரண்டு கைகளாலும் தலையின் அனைத்து பகுதிகளிலும் நன்கு அழுத்தி, மாலிஷ் செய்து வந்தால் எப்படி பட்ட மனம் சார்ந்த பிரச்சனைகளும் நீங்கி உடல் புத்துணர்வு பெறலாம்.

உடல் குளிர்ச்சி

  • தேங்காய் எண்ணெய் இயற்கையிலேயே குளிர்ச்சி தன்மை அதிகம் கொண்டுள்ளளது. தேங்காய் எண்ணையால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் நீங்கி உடல் சீக்கிரத்தில் குளிர்ச்சி அடையுமாம். தேங்காய் எண்ணையை உடல் மற்றும் தலைக்கு நன்கு தேய்த்த பின்பு குளிப்பதால் உடலில் இருக்கின்ற உஷ்ண நோய்கள் நீங்கி விடும். உடல் குளிர்ச்சி பெற்று விடலாம்.

Related posts