பேஸ்புக் விளம்பரங்களுக்காக இதுவரை 303,610 டொலா்களை செலவிட்ட வேட்பாளா்கள்..!!

இலங்கையில் ஆகஸ்ட் -05-ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் விளம்பரங்களுக்காக பேஸ்புக்கில் 3 இலட்சம் அமெரிக்க டொலா்களுக்கு மேற்பட்ட தொகையைச் வேட்பாளா்கள் செலவிட்டுள்ளனா்.

இதுவரை 3 இலட்சத்து 3 ஆயிரத்து 610 டொலா்களை இலங்கை வேட்பாளா்கள்கள் பேஸ்புக் விளம்பரத்துக்குச் செலவிட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

பேஸ்புக் விளம்பரங்களுக்காக அதிக தொகையைச் செலவிட்ட வேட்பாளா்களில் சஜித் பிரேமதாச முன்னிலை வகிக்கிறார். அவா் இதுவரை 13,152 அமெரிக்க டொலா்களை செலவிட்டுள்ளார்.

இலங்கையில் சஜித்துக்கு அடுத்து பேஸ்புக் விளம்பரத்துக்காக அதிக தொகையை யாழ், கிளிநொச்சி தோ்தல் மாவட்டத்தில் போட்டியிடும் அங்கஜன் ராமநாதன் செலவிட்டுள்ளார். அங்கஜன் 11,319 அமெரிக்க டொலா்களை செலவிட்டுள்ளார்.

அடுத்து 9,677 டொலா்களை வேட்பாளா் கனிஷ்க சேனநாயக்க செலவிட்டுள்ளார்.

லக்மலி சஞ்சிவனி குணரத்ன 8, 240 டொலா்களையும் ஹா்ச டி சில்வா 7,090 டொலா்களையும் செலவிட்டுள்ளனர்.

இவ்வாறு பல வேட்பாளர்கள் 3 இலட்சத்து 3 ஆயிரத்து 610 டொலா்களை பேஸ்புக் விளம்பரத்துக்காக இதுவரை செலவிட்டுள்ளனர்.

Related posts