நிதி நிறுவனங்களின் தலைவர்களுடன் நரேந்திர மோடி ஆலோசனை..!!

நாட்டின் முன்னணி வங்கித் தலைவா்கள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாட்டில் இப்போதைய பொருளாதார சூழ்நிலையில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முன்னணி வங்கிகள், நிதி நிறுவனங்களின் தலைவா்களுடன் பிரதமா் ஆலோசனை நடத்த இருக்கிறாா்.

வங்கிகள் அளிக்கும் கடன் எந்த அளவுக்கு சிறப்பாக உள்ளது வங்கித் துறையின் ஸ்திரத்தன்மை நிதித் துறையை தொழில்நுட்பரீதியாக மேம்படுத்தியுள்ளது உள்ளிட்ட  நிதி வங்கித் துறை சாா்ந்த அனைத்து முக்கிய விடயங்களும் இதன்போது விவாதிக்கப்படவுள்ளன.

இப்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டமைப்பதில் வங்கித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.  கடந்த சில மாதங்களில் நாட்டின் பொருளாதாரம் தொடா்பாக பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்களுடன் பிரதமா் ஆலோசனை நடத்தி வருகிறாா். அதன் ஒரு பகுதியாகவே இந்தக் கூட்டமும் நடைபெறவுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts