தேசிய பிரச்சனைகளின் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்..!!

ஜனாதிபதி ஆட்சிமுறை, நாடாளுமன்ற தேர்தல் முறை மற்றும் தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பிரசாரக்கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றத்தில் 16 உறுப்பினர்களை கொண்டிருந்தபோதும் ஆட்சியை அமைப்பதிலும், நாடாளுமன்றத்தை கலப்பது போன்ற விடயங்களில் கூட்டமைப்பின் ஆதரவில்லாமல் எதனையும் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தியதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் புதிய அரசியலமைப்பு மக்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட வேண்டும் என்றும் எனவே ஜனநாயக ரீதியாக நடைபெறும் இத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

Related posts