கொழும்பை அபிவிருத்தி செய்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு..!!

கொழும்பு மாவட்ட மக்கள் முகங்கொடுக்கும் முக்கிய பிரச்சினைகளை இனங்கண்டு முறையான திட்டத்துடன் கொழும்பை அபிவிருத்தி செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வீட்டு உறுதிப்பத்திரங்கள் கிடைக்காமை சேறிகளுக்கு மாற்றீடாக வீடுகளை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் வெள்ளத்தினை கட்டுப்படுத்துவதற்கு தீர்வாக கடவத்தை, வெள்ளவத்தை வாவிவழி பாதையை விரிவுபடுத்தல் ஆகிய கோரிக்கைகள் ஜனாதிபதியிடம் இதன்போது முன்வைக்கப்பட்டன.

இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts