அரசாங்கத்துக்கு நெருக்கமாக செயற்பட்டால்தான் நாங்கள் மாற்றத்தினை உருவாக்க முடியும்..!!

தற்போதைய அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்படுவதன் ஊடாகதான் நாங்கள் மாற்றத்தினை உருவாக்க முடியுமென முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன்  (கருணாஅம்மான்) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்கள்பில் தற்போது பல கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனால் மக்கள் யாருக்கு வாக்களிப்பதென்ற குழப்பத்தில் இருக்கின்றனர்.

நீங்கள் குழப்பமடையாமல் எங்களுடைய தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினது தையல் இயந்திரச் சின்னத்திற்கு வாக்களியுங்கள். தையல் இயந்திரச் சின்னம் என்பது உங்களுக்கு பரீட்சயமான சின்னமாகும்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எங்களுடைய பிரதிநிதிகள் இருந்தால்தான் அபிவிருத்திகளை தொடர்ச்சியாக கொண்டுசெல்ல முடியும். ஆகவே மக்கள் இந்த வாய்ப்பினை இழக்கக்கூடாது.

கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கமானது குறைந்தது 20வருடங்கள் நீடிக்க வாய்ப்பிருக்கின்றது. பலமான எதிர்க்கட்சியில்லை. ஆகையால் இந்த அரசாங்கத்துடன் நெருக்கமாக செய்படுகின்றபோதுதான் நாங்கள் மாற்றத்தினை உருவாக்க முடியும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எனக்கும் உள்ள நெருக்கம் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்த நெருக்கத்தை பயன்படுத்தி எங்களுடைய மக்களை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கு வாய்ப்பிருக்கின்றது.

ஆகவே இதனை புரிந்துகொண்டு எங்கள் குழந்தைகளின் எதிர்காலம், பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டுமானால் சிறந்த முடிவை நீங்கள் எடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts