வெளிநாடு செல்ல முயன்ற 6 பேர் கைது..!!

போலி கடவுச் சீட்டுக்களுடன் வெளிநாடுகளுக்கு பயணிப்பதற்கு முயற்சி செய்த 3 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் நேற்றைய தினம் (27) கட்டார் வழியாக இத்தாலி நோக்கி பயணிப்பதற்காக இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த வேளையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்கள் தங்கொடுவ, தும்மலசூரிய, லுணுவில, நாத்தாண்டி மற்றும் பல்லேகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts