பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45ஆயிரத்தை கடந்தது..!!

ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45ஆயிரத்தை கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 45ஆயிரத்து 902பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இதுவரை கொவிட்-19 தொற்றினால், இரண்டு ஆயிரத்து 206பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆயிரத்து 104பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 19பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர 17ஆயிரத்து 902பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 353பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அத்துடன், 25ஆயிரத்து 794பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts