நடிகை ஐஸ்வர்யா ராய் குணமடைந்து வீடு திரும்பினார்..!!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும், மகள் ஆராத்யா ஆகியோர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பொலிவுட் திரையுலகினரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில், வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து அபிஷேக் பச்சனின் மனைவியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவர்களது மகளான ஆராத்யா ஆகியோரும் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அபிஷேக் பச்சன் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பதிவில் தெரிவித்துள்ள அவர், “ எனது தந்தையும்,  நானும் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறோம். எங்களுக்காக தொடா்ந்து பிராா்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி”  எனக் கூறியுள்ளார்.

Related posts