சுமந்திரன் சிறிதரனுக்கு எதிராக யாழில் துண்டுப்பிரசுரம்..!!

‘தமிழ் மக்களே சிந்தித்து செயற்படுவோம்’ என்ற தலைப்பில், ‘சுமந்திரன், சிறிதரனை தமிழ் அரசியலில் இருந்து அகற்றுவோம்..’ என்ற துண்டுப்பிரசுரங்கள் யாழ் குடாவில் வினியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் புத்திஜீவிகள் என்ற பெயரில் வினியோகிக்கப்பட்டுவரும் அந்தத் துண்டுப் பிரசுரங்களில்,

  • தமிழரின் தேசிய போராட்டத்தை ஏற்றுக்கொள்ளாத சுமந்திரன் தமிழருக்குத் தலைமைதாங்கலாமா?
  • இனப்படுகொலை விசாரணையை நீர்த்துப்போக சிங்கள அரசுடன் சேர்ந்து சதிசெய்த சுமந்திரனையா மீண்டும் நாடாளுமன்றம் அனுப்பப்போகின்றீர்கள்?
  • அடுத்த தீபாவளிக்குள் அரசியல் தீர்வு என்று ஏமாற்றிய சம்பந்தனும், 2018 ஆண்டுக்குள் அரசியல் தீர்வு இல்லையேல் பதவி விலகுவேன் என்று கூறிய சுமந்திரனும் ஏன் நாடாளுமன்றப் பதவிகளைத் துறக்கவில்லை?
  • கொழும்பில் சிங்களவர்களுடன் கூடிவாழ்வதை பாக்கியமாகக் கருதும் சுமந்தினுக்கு எமது நிலங்கள் பறிபோவது பற்றி எவ்வாறு கவலை இருக்கும்?
  • தமிழ் தேசியத்தின் காவலன் என்று தன்னை பறைசாற்றிவிட்டு இன்று பணத்திற்காக பச்சோந்தியாக மாறிய சிறிதரன் மீண்டும் எமக்குத் தேவையா?

போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

யாழ்குமாவின் பேரூந்துகள், வைத்தியசாலை, பொது இடங்களில் இந்த துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts