சம்பியன்ஸ் லீக் தொடருக்கு மன்செஸ்டர் யுனைடெட்- செல்சி அணிகள் தகுதி

ஐரோப்பாவிலுள்ள உயர்தர கால்பந்து கழக அணிகளுக்கிடையில் நடைபெறும் சம்பியன்ஸ் லீக் தொடருக்கு மன்செஸ்டர் யுனைடெட் மற்றும் செல்சி அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரின் புள்ளிபட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் சம்பியன்ஸ் லீக் தொடருக்கு முன்னேறும்.

இதற்கமைய இத்தொடரின் இறுதி லீக் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெறலாம் என்ற தீர்க்கமான போட்டியில், லெய்செஸ்டர் அணியும், மன்செஸ்டர் யுனைடெட் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

எதிர்பார்ப்பு மிக்க பரபரப்பான போட்டியில், மன்செஸ்டர் யுனைடெட் 2-0 என வெற்றி பெற்று சம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றது.

இதேபோல, வோல்ஸ் அணிக்கெதிரான போட்டியில், செல்சி அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று செல்சி அணி சம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றது.

முன்னதாகவே இத்தொடரில் முதலிடம் பிடித்த லிவர்பூல் அணி மற்றும் மன்செஸ்டர் சிட்டி அணிகள் தகுதிபெற்று விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts