கிளிநொச்சியில் காட்டு யானை தாக்கிய விரிவுரையாளருக்கு அறுவை சிகிச்சை..!!

கிளிநொச்சியில் கடந்த 19 ஆம் திகதி இரவு காட்டு யானையின் தாக்குதலில் காயமடைந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்த யாழ் பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளருக்கு இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காயத்ரி தில்ருக்ஷி என்ற களனியில் வசிக்கும் 32 வயதுடைய பெண் விரிவுரையாளரே இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் இணைந்த கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பிரிவில் விரிவுரையாளராக இவர் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts