ஐ.தே.கட்சிக்குள் பிரச்சினைகள் என்பது புதியதல்ல..!!


ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் காலம் முழுவதும் பிரச்சினைகள் இருந்து வந்ததால், பிரச்சினைகள் என்பது கட்சிக்கு புதிய விடயமல்ல என அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சினைகள் சம்பந்தமான வரலாறு குறித்து ரணில் விக்ரமசிங்க விளக்கம் ஒன்றை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபகரும், இலங்கையின் முதலாவது பிரதருமான டி.எஸ்.சேனாநாயக்கவுக்கு பிற்காலத்தில் நாட்டின் பிரதமராக பதவிக்கு வந்த எஸ்.டப்ளியூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுக்கும் இடையில் முதலாவது பிரச்சினை ஏற்பட்டது.

இதன் பின்னர் டட்லி சேனாநாயக்க மற்றும் சேர் ஜோன் கொத்தலாவவுக்கும் இடையில் இரண்டாவது பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக 1956ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் டட்லி சேனாநாயக்க போட்டியிடவில்லை.

எனினும் பின்னாளில் ஜோன் கொத்தலாவல கட்சியின் தலைமைத்துவத்தை கைவிட்டதன் காரணமாக டட்லி சேனாநாயக்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரானார்.

இதன் பின்னர் டட்லி சேனாநாயக்கவுக்கும் ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது.

கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதை தவிர்ப்பதற்காக ஜே.ஆர். ஜெயவர்தன கட்சியின் உதவியை நாடினார்.

இதன் பின்னர் டட்லி சேனாநாயக்கவும், ஆர்.பிரேமதாசவுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது. டட்லி சேனாநாயக்கவின் மறைவின் பின்னர் அது முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கும் ருக்மன் சேனாநாயக்கவுக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டன.

அதற்கு பின்னர் ஆர்.பிரேமதாசவுக்கும் லலித் அத்துலத்முதலி மற்றும் காமினி திஸாநாயக்க உட்பட குழுவினருக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டன.

இதனடிப்படையில் சில பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதுடன் இதன் காரணமாக சிலர் புதிய கட்சிகளை ஆரம்பித்ததன் காரணமாக மிக சொற்பமான பிரச்சினைகளே தீர்க்கப்பட்டன.

இந்த நிலையில் தற்போது பிரச்சினைகளை உருவாக்கியவர்கள், கட்சியில் இருந்து விலகிச் சென்று தனித்து போட்டியிடுகின்றனர் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts