இலஞ்சம் பெற்ற கிராம சேவக அலுவலர் ஒருவர் கைது..!!

வதிவிட சான்றிதல் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற கிராம சேவக அலுவலர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 174, வனாதமுல்ல கிராம சேவக பிரிவில் கடமையாற்றி வந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நபரொருவருக்கு புகையிரதத் திணைக்களத்திற்கு சமர்ப்பிப்பதற்காக, வதிவிட சான்றிதல் ஒன்றை வழங்குவதற்காகவே இவ்வாறு இலஞ்சம் பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts