இரண்டு நாட்களில் 5 இலட்சம் கொரோனா பரிசோதனைகள் முன்னெடுப்பு..!!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் நாளாந்தம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 2 நாட்களில் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி இரண்டு நாட்களில் 5 இலட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால்   தினமும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விரைவு சோதனை,  கண்காணிப்பு மற்றும் சிகிச்சையை தொடருமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts