ஆயிரத்து 280 இற்கும் அதிகமான பொது மக்கள் கொலை..!!

சுடாடினில் டாவுர் பகுதியில் மோதல் சம்பவம் காரணமாக 60 பேர் உயிரிழந்து 60 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை இதனை தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதியினுள், ஆப்கானிஸ்தானில் ஆயிரத்து 280 இற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மேலும்   தெரிவித்துள்ளது.அமெரிக்காவிற்கும் தாலிபான் ஆயுததாரிகளுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஒன்று அமுலில் இருந்த போதிலும், இந்த இழப்புக்கள் இடம்பெற்றுள்ளன.பெரும்பாலும், ஆப்கானிஸ்தானிய அரச படையினரும், தாலிபான்களின் செயல்பாடுகள் காரணமாகவே இந்த எண்ணிக்கையிலான உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.இது தவிர, அந்த காலப்பகுதியினில், மேலும் 2 ஆயிரத்து 176 பொதுமக்கள் காயமடைந்ததாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலகத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியாக இடம்பெறும் மோதல்களில் ஆப்கானிஸ்தானிலேயே அதிக அளவிலான பொதுமக்கள் கொல்லப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.18 வருடங்களாக இடம்பெறும் மோதலை முடிவிற்கு கொண்டு வரும் வகையில், அரசியல் கைதிகளை விடுவிக்கும் நோக்கிலான ஒப்பந்தம் ஒன்று டோஹாவில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் வசம் உள்ள 5 ஆயிரம் கைதிகளை விடுவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.இதற்கு அமைய ஆப்கானிஸ்தானிய அரசாங்கம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாலிபான் ஆயுததாரிகளை விடுவித்துள்ளது.இருப்பினும் சிறையில் உள்ள 600 தாலிபான்களை விடுவிக்க ஆப்கானிஸ்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts