19 தொற்றினால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

போர்த்துக்கலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50ஆயிரத்தை கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போர்த்துக்கலில் இதுவரை 50ஆயிரத்து 164பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மொத்தமாக வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 117பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 209பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததோடு, ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுதவிர, வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13ஆயிரத்து 230பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 48பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன், மொத்தமாக 35ஆயிரத்து 217பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

போர்த்துக்கலில் முன்னரை விட தற்போது கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்றது.

இதனால், புதிய தொற்றுகள் அதிகரிப்பதைத் தடுக்க போர்த்துக்கல் சமீபத்தில் அதன் தலைநகர் லிஸ்பனின் புறநகரில் உள்ளூர் முடக்கநிலை கட்டுப்பாடுகளை விதித்தது.

அத்துடன் பல உலக நாடுகள், போர்த்துக்கலை சேர்ந்தவர்கள் தங்கள் நாட்டிற்குள் வருவதற்கு தடை விதித்துள்ளன.

Related posts