மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ள பிரேஸிலில், ஒரு கிழமைக்கு பிறகு நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

சமீபகாலமாக நாளொன்றில் 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுவந்த நிலையில், கடந்த 24 மணித்தியாலத்தில் 23,467பேர் மட்டுமே பாதிக்கப்பட்டதாக பதிவாகியுள்ளது. அத்துடன் 716பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால், அதிக பாதிப்பினை எதிர்கொண்ட இரண்டாவது நாடாக விளங்கும் பிரேஸிலில், இதுவரை மொத்தமாக 24இலட்சத்து 19ஆயிரத்து 901பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 87ஆயிரத்து 52பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர, ஆறு இலட்சத்து 98ஆயிரத்து 575பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், எட்டு ஆயிரத்து 318பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன், இதுவரை 16இலட்சத்து 34ஆயிரத்து 274பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Related posts