ஸ்பெயினிலிருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்த பிரித்தானியா ..!!

ஸ்பெயினிலிருந்து பிரித்தானியாவிற்குள் நுழையும் பயணிகள் தற்போது கொரோனா வைரஸ் பயண விதிகளின் கீழ் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் புதிதாக நேற்று சனிக்கிழமை 900 பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக முக்கிய நகரங்கள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதால் இரண்டாவது அலையின் தாக்கம் காணப்படுவதாக ஸ்பெயின் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அத்தோடு பிரிட்டிஷ் எயாவேஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இந்த புதிய நடவடிக்கைகளை பிரித்தானிய விடுமுறை நாட்களில் “இன்னொரு அடி” என்று விமர்சித்துள்ளன.

இதேவேளை பல பயணிகள் “ஆழ்ந்த கோபத்தில்” இருப்பார்கள் என்றும் குறிப்பாக 48 மணி நேரத்திற்கு முன்னர் அரசாங்கம் “ஸ்பெயினில் கோடை விடுமுறையை கழிக்க பல்லாயிரக் கணக்கானோர் வருவதற்கு முன்னர்” இந்த முடிவு எடுக்கப்படவில்லை என்றும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

அவர்கள் திரும்பி வரும்போது 14 நாட்கள் தனிமைப்படுத்தலை எதிர்கொள்வார்கள் என்று தெரிந்திருந்தால் பலர் பயணம் செய்திருக்க மாட்டார்கள் என நுகர்வோர் உரிமைகள் சஞ்சிகையின் ஆசிரியர் கூறியுள்ளார்.

Related posts