இந்தியாவில் புதிய உச்சம்..!!

இந்தியாவில் புதிய உச்சமாக இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 50 ஆயிரத்திற்கும்  மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 50 ஆயிரத்து 525 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 இலட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேலாக பதிவாகியுள்ளது.

அதேநேரம் இந்த வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்களில் 716 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 812 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்த வைரஸ் தொற்றிலிருந்து இதுவரையில், 9 இலட்சத்து 18 ஆயிரத்து 735 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் இந்த தொற்றுக்கு உள்ளான 4 இலட்சத்து 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், அவர்களில் 8 ஆயிரத்து 944 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த வைரஸ் தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக தொடர்ந்தும் மகராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகியன விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts