விசேட கலந்துரையாடல்..!!

அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பொதுத் தேர்தல் தொடர்பான இறுதிக் கட்ட பணிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக தெரிவித்தாட்சி அதிகாரிகளும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல் ராஜகிரயவிலுள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, தேர்தலை நடத்துவது தொடர்பில் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு இதன்போது மீண்டும் அறிவுறுத்தப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொதுத் தேர்தலின் போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இன்றைய நாளை விசேட தினமாக கருத்திற்கொண்டு வாக்காளர்களுக்கான வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இதுவரை குறித்த வாக்குச் சீட்டுகள் கிடைக்காதவர்கள் முடிந்தளவு இன்றைய நாளில் வீட்டில் தங்கியிருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts