கோரிக்கைக்கு செவிசாய்த்த ஜனாதிபதி..!!

கம்புருபிடிய புதிய நகர அபிவித்தி, 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாய அறுவடைக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீடு, கருவப்பட்டடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்தல் போன்ற மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் கம்புருபிடிய பகுதியில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை ஹக்மன பகுதியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தின் போது முறையாக இயங்காத பேருந்து சேவை, காணி அனுமதிப் பத்திரம் இன்மை மற்றும் தொழில் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கைத்தொழில் பேட்டைகள் அமைப்பதன் அவசியத்தன்மை உள்ளிட்ட கோரிக்கைகள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெணியாய, அகுருஸ்ஸ மற்றும் வெலிகம பகுதிகளில் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts