கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படும் அச்சத்தில்..!!

ஸ்பெயினில் கொவிட்-19 தொற்றைய கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் பல நடைமுறை அந்த நாட்டு அரசாங்கம் அமுல்படுத்தி வருகின்றது.

அங்கு கொரோனா இரண்டாவது அலை ஏற்படும் என்ற அச்சத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய ஸ்பெயினின் கடலோனியா பிராந்தியம் கடந்த நாட்களாக இரவு வேளைகளில் மூடப்படுகின்றது.

எவ்வாறாயினும் வடகிழக்கு பகுதியில் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை ஸ்பெயினில் இருந்து நாடு திரும்புபவர்களை சுயதனிமைப்பத்தலுக்கு உட்படுத்துமாறு பிரித்தானியா அறிவித்துள்ளது.

இதற்கிடையில் பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளில் புதிதாக கொவிட்-19 தொற்றுறதியானவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

குறித்த நாடுகளில் பொருளாதாரத்தை மீள மீட்டெடுப்பதன் காரணமாக கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதில் சிக்கல் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல நாடுகளில் கொவிட்-19 தாக்கம் குறைவடைந்துள்ள நிலையில் அமெரிக்க மற்றும் தெற்காசியாவில் அதிகளவு மக்கள் தொகையினை கொண்ட நாடுகளில் அதன் தாக்கம் அதிகரிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 61 லட்சத்து 85 ஆயிரத்து 259 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 6 லட்சத்து 47 ஆயிரத்து 515 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

எனினும் சர்வதேச ரீதியில் 99 லட்சத்து 372 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts