இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு..!!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 6ஆம் கட்ட ஊரடங்கு தற்போது அமுலில் இருக்கிறது. இந்த ஊரடங்கு எதிர்வரும் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்தது. எனினும் இந்த காலக்கட்டத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கடைகள், அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், வாகன போக்குவரத்தும் அனுமதிக்கப்படாது என்றும் மக்கள் அனைவரும் வெளியில் வராமல், வீடுகளிலேயே தங்கியிருந்து அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  அத்தியாவசிய சேவைகளான மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் நிலையங்கள், காவு வண்டி, அமரர் ஊர்திகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டுமே இயங்குவதற்கு இன்றைய தினம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவை தவிர ஏனைய சேவைகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts