இந்தியாவிடம் முக்கிய கோரிக்கையை..!!

உலக எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக அரசாங்கத்திற்கும் மக்களுக்கு இடையூறு ஏறபடாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக திருகோணமலை எண்ணெய் தாங்கி கட்டமைப்பில் உள்ள 25 தாங்கிகளை வழங்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் இந்திய அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் குறித்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தற்போது பயன்படுத்த முடியாத நிலைமையில் உள்ள திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை திருத்தி பயன்படுத்த வழங்குமாறு மின்வலு, எரிசக்தி அமைச்சர் மகிந்த அமரவீர, இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் போபால் பக்லேவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன்போது திருகோணமலை எண்ணெய் தாங்கி கட்டமைப்பில் உள்ள 25 தாங்கிகளை இலங்கைக்கு வழங்குமாறு கோரியதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த கோரிக்கை தொடர்பிலான விரிவான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக விசேட அதிகாரி ஒருவரை நியமிப்பதாக இந்திய உயர்ஸ்தானிகள் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் 25 தாங்கிகளை இந்தியா இலங்கைக்கு வழங்குமானால் எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்களானது மக்களையும் அரசாங்கத்தையும் பாதிக்காது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர் இதன்போது குறிப்பிட்டார்.

இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு திருகோணமலையில் உள்ள 100 எண்ணெய் தாங்கிகள் 35 ஆண்டு குத்தகைக்கு கடந்த 2002 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் சீனக் குடா பகுதியில் இருக்கும் நல்ல நிலையில் உள்ள 15 தாங்கிகளை இந்திய எண்ணெய் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. இதனை தவிர லீசி எண்ணெய்யை களஞ்சியப்படுத்தவும் அந்த நிறுவனம் இரண்டு தாங்கிகளை பயன்படுத்தி வருகிறது. மேலும் சில தாங்கிகளை இந்திய நிறுவனம் அமைத்துள்ளது.

Related posts