ரொராண்டோ சிறுவா் பகல் பராமரிப்பு மைய ஊழியருக்கு கொரோனா தொற்றால் அச்சம்..!!

ரொராண்டோவில் உள்ள ஃபால்ஸ்ராப் சிறுவா் பகல் பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதை அடுத்து அந்த மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்தப் பராமரிப்பு நிலைய சிறுவா்கள் மற்றும் ஊழியா்கள் அனைவரும் 14 நாட்கள் தனிப்படுத்தப்பட்டுள்ளதாக ரொராண்டோ நகர சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மையத்தில் இருந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு வியாழக்கிழமை பிற்பகல் நிலைமை குறித்து அறிவுறுத்தப்பட்டதாக நகர நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பால்ஸ்ராப் சிறுவர் பராமரிப்பு மையம் 31 சிறுவர்கள் மற்றும் 26 பராமரிப்பு ஊழியர்களுடன் செயற்பட்டு வருகிறது. அவசர வேலைகளுக்குச் செல்லும் பெற்றோர்களுக்காக மார்ச் 31 முதல் ஜூன் 26 வரை அவசர குழந்தை பராமரிப்பு மையமாகவும் இந்த மையம் செயற்பட்டது.

Related posts