மே.தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட்


இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி நேற்றைய ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆட்டநேர முடிவில், ஜோஸ் பட்லர் 56 ஓட்டங்களையும், ஒல்லி போப் 91 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், கெமார் ரோச் 2 விக்கெட்டுகளையும், ரொஸ்டன் சேஸ் 1 விக்கெட்டினையும் சாய்த்தனர்.
……….

மன்செஸ்டர்- ஓல்ட் ட்ரப்போர்ட் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ஓட்டங்களை பெற்றது.

இன்னமும் 6 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், முதல் இன்னிங்ஸிற்காக போட்டியின் இரண்டாவது நாளை இங்கிலாந்து அணி இன்று தொடரவுள்ளது.

Related posts