மேற்கு வங்கத்தில் விமான சேவைகளை நிறுத்த உத்தரவு..!!

மேற்கு வங்கத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் விமான சேவைகள் நிறுத்தப்படவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அம்மாநிலத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநிலத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இன்று முதல் 29ம் திகதி வரை விமான சேவைகளை நிறுத்தி வைக்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

தலைநகர் கொல்கத்தாவில் கொரோனா தொற்று பரவியதற்கு விமானங்கள் இயக்கப்பட்டதும் ஒரு காரணம் என்று மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

Related posts