படைகளை விலக்கிக்கொள்ள இருநாடுகளும் ஒப்புதல்..!!

எல்லைப் பகுதியில் படைகளை விலக்கிக்கொள்ள இருநாட்டு இராணுவத்தினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பில் இராணுவ தரப்பின் மூத்த அதிகாரிகள் இணைந்து ஆலோசனைகளை மேற்கொள்வார்கள் என இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 5ம் திகதி இந்தியா – சீனா சிறப்பு பிரதிநிதிகள் தொலைபேசியில் உரையாடியபோது இரு நாட்டு படைகளையும் விலக்குவது குறித்து உடன்பாடு ஏற்பட்டது.

அதை முன்னெடுத்துச் செல்வது என தற்போதைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்தியா – சீனா பரஸ்பர உறவில் சமூகமான சூழலை உருவாக்க எல்லையில் படைகளை விலக்குவது அவசியம் என இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.

கூட்டத்தில் எல்லையில் தற்போதைய நிலைவரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.எல்லையில் படைகளை விலக்கி பதற்றத்தை குறைக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆராய இரு நாடுகளின் மூத்த அதிகாரிகள் விரைவில் மீண்டும் சந்தித்து பேசவும் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts