நடிகர் அஜித்தின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் அஜித்தின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

குறித்த நபர் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைப்பேசியில் மிரட்டல் விடுத்திருந்தார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் எந்த வெடிபொருளும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளமை கண்டறிந்துள்ளதுடன், குறித்த நபரை தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts