தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை வழங்குவேன்..!!

தீவரவாத செயல்களை முன்னெடுத்த மற்றும் அதற்கு திட்டமிட்ட நபர்களுக்கு தங்களுடைய அரசாங்கத்தில் மரண தண்டனை வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று (22) இரவு பதுளை முஸ்லிம் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை பதுளை விளையாட்டரங்கிலும் மக்கள் சந்திப்பு ஒன்று சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றிருந்தது.

Related posts