தி.மு.க.வுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்..!!

தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகளும் ஒன்றுக்கூடும் கூட்டமொன்று எதிர்வரும் ஜூலை.27ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.முக.தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அக்கட்சி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காணொலிக்காட்சி வழியாக நடைபெறும் குறித்த கூட்டத்தில் அ.தி.மு.க.அரசின் கொரோனா பேரிடர் கால மோசடிகள் மற்றும் நிர்வாகத் தோல்விகள் குறித்து விவாதம் நடைபெறவுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு மீது தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவித குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றன.

இந்நிலையிலேயே மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவருவது குறித்தும் அரசின் செயற்பாடுகள் குறித்து ஆலோசிக்கவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு தி.மு.க. தலைவர்  அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts